எதில் மனநிறைவு அடைகிறோமோ இல்லையோ, நாம் நமது சுற்றம் வரை நலமாக இருந்தால் போதும் என்பதில் மட்டும் சுலபத்தில் மனநிறைவு அடைந்துவிடுகிறோம். இவ்வுலகின் ஒவ்வொரு உயிரைப் பேணிக் காப்பதிலும் நம் ஒவ்வொருக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை என்றைக்காவது உணர்ந்து செயல் பட்டிருக்கிறோமா என்று யோசித்துப் பார்த்தால் இல்லை.
சாலையில் விரைந்து கொண்டிருப்போம், நம் கண் முன் ஒரு விபத்து நிகழும், நாமும் வாகனத்தை நிறுத்துவோம், உதவ என்று நினைத்துவிட வேண்டாம், நமக்கு வேடிக்கை பார்ப்பது அதைவிட மிக முக்கியமாச்சே.
இரவு அலுவலகம் விடுத்து பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டை நோக்கி நடந்து கொண்டிருப்போம், சாலையோரம் ஒரு குடிமகன் உடை கலைந்து கிடப்பான், உற்றுப் பார்த்துவிட்டு ச்சீ என்று நடையைக் கட்டுவோம். எவன் கோவனம் காத்துல பறந்தா நமக்கென்ன.
நீரு என்ன கிழிச்சீரு னு என் மேல யாரும் எகிற வேண்டாம், நாம னு சொன்னதுல நானும் தான் அடக்கம். நேற்று தூக்கமில்லாமல் உலாத்திக் கொண்டிருந்தச் சமயத்தில் Restoring Faith in Humanity என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு காணொளி எனக்குள் ஒரு பாதிப்பை எற்படுத்தியது. நேரம் இருந்தால் நீங்களும் கூகுள் செய்துப் பாருங்கள். மனிதம் நேசிக்கப்படட்டும்.
No comments:
Post a Comment