கடனுக்குக் காற்றைப் பெற்று,
விலையின்றி நமக்கு விற்கும்
பொதுநலப் பிரதிநிதி அவள்!
கடன் கொடுக்கினன் சினம் எடுப்பின்,
பதைபதைத்து, கதவடித்து
சூறாவளி தடுத்திடுவாள்!
அணல் வெயில் கக்கும்போதும்,
துளிவியர்வை துடைத்திடவே..
சுடுமென்றும் பாராமல்,
தனை மறந்துத் தாழ் திறக்கிறாள்!
கடுமழை கொட்டுகையில்..
சில்லென்றக் காற்றோடு,
சிறுசிறுச் சாரல் சேர்த்து
சருமம் ஈரமாக்குமே..
சுகமான நினைவுகள்!
பொழுதும் சாய்ந்திடவே..
நிலமகளைக் கண்டிடத்தான்
நிலாமகள் வந்திடுவாள்.
அத்தேவதையின் தேகத்தோடு,
தென்னங்கீற்றும் கொஞ்சுமந்த
அழகான காட்சியைத் தான்
கொடுத்தே கொன்றிடுவாள்!!