உண்மையிலேயே சொல்லிக்கும்படியான ஒரு நல்ல கதையை தான் தயார் செய்திருக்கிறார்கள். அக்கதைக்கு இரண்டு நாயகர்கள் தேவை. கதைப்படி அதில் ஒருவர் முதியவராக இருக்க வேண்டிய கட்டாயம். அப்புறம் இந்த இரண்டு நாயகர்களையும் கட்டி மேய்க்க இன்னுமொரு கதாப்பாத்திரம் இருக்க அங்கு வைத்து நாயகியின் அறிமுகம். மூவருமே நடிப்பில் பிண்ணியிருக்கிறார்கள். ஆங்காங்கே கொஞ்சம் சலிப்பைத் தரும் திரைக்கதை தான் என்றாலும் மொத்தத்தில் பரவாயில்லை ரகம். வசனங்களுக்காகவே பால்கியை தனியாக பாராட்டலாம். அவ்வளவு அசத்தல். பி.சி யின் ஒளிப்பதிவு சிறப்பு.
ஒரு துலாபாரம்.
அதன் ஒரு தட்டில் இதுவரை குறிப்பிட்ட எல்லாமே வைத்திடுங்கள். சமநிலை வேண்டுவோர் மட்டும் மறு தட்டில் வையுங்கள்.. படத்தின் பின்னனி இசையை.
1. அமிதாப்
2. இளையராஜா
3. தனுஷ்
2. இளையராஜா
3. தனுஷ்
இவ்வளவு சொல்லிவிட்டு அக்ஷராவைப் பற்றி எதுவுமே சொல்லாமல் போனால் மனசாட்சி மன்னிக்காது. ஒரே வரியில் சொல்கிறேன்..
அக்ஷரா, கமலின் உண்மையான வாரிசு!
No comments:
Post a Comment