கல் உடைக்கனும்,
கண்ட வெள்ளைத்தோல் வாய்களின்
ஏச்சு சகிக்கனும்!
கண்ட வெள்ளைத்தோல் வாய்களின்
ஏச்சு சகிக்கனும்!
உடை மறக்கனும்,
உட்காரக்கூட முடியா இடத்தில்
நீட்டிப் படுக்கனும்!
உட்காரக்கூட முடியா இடத்தில்
நீட்டிப் படுக்கனும்!
உதை பொறுக்கனும்,
ரத்தம் கித்தம் சிந்தினாலும்
உடல் பிழைக்கனும்!
ரத்தம் கித்தம் சிந்தினாலும்
உடல் பிழைக்கனும்!
குரல் எழுப்பனும்,
பற்கள் உடை பட்டாலுமே
நாவு துடிக்கனும்!
பற்கள் உடை பட்டாலுமே
நாவு துடிக்கனும்!
இனம் உயரனும்,
குனிந்து குனிந்தே பழகிவிட்ட
தலை நிமிரனும்!
குனிந்து குனிந்தே பழகிவிட்ட
தலை நிமிரனும்!
சுயம் ஒதுக்கனும்,
மண் தந்த மக்களுக்கென்றே
உயிர் எழுதனும்!
மண் தந்த மக்களுக்கென்றே
உயிர் எழுதனும்!
செய்தனன் யாவும் ஏன்
பெய்தன யாவுமே!
பெய்தன யாவுமே!
உன் புகழ் சொல்லியே
பெயர் புவிதனை ஆளுமே!
பெயர் புவிதனை ஆளுமே!
பி.கு: நெல்சன் மண்டேலா அவர்களின் இருப்பத்தேழு வருட சிறை வாழ்க்கையை வியந்ததில் தாமாய் வந்து விழுந்த வார்த்தைகளை கொஞ்சம் ஒழுங்கிப்படுத்தி வைத்திருக்கிறேன். மாபெரும் தலைவரின் நிகரில்லாத் தியாகத்திற்கு ஏதோ என்னால் இயன்றதொரு சிறிய அர்ப்பணிப்பு.
No comments:
Post a Comment