Friday, May 17, 2013

என் இலங்கைச் சகோதரனுக்கு!!

அகரம் பேசும் நாவிற்கு,
அனுகுண்டு வரவேற்பு!
“நீ படித்தால்,
நான் வெடிப்பேன்!” என்று
அன்போடு திரிகிறது!

o0o 

விமானம்.. குண்டுகளென
வளர்ந்துவிட்டதாலோ..
காக்கை போடும்
எச்சத்திற்கும்
காதை மூடும் குழந்தைகள்!

o0o

தமிழ் என்ன
தொழு நோயா..
வரும் முன்
காப்பதற்கு..?!
கர்ப்பிணிகளெனவும் பாராமல்
கன்னிகள் வெடிக்கின்றன!

o0o

புருஷனைக் கொன்றுவிட்டு,
பத்தினியைச் சிதைக்கின்றனர்!
தமிழ் வேண்டாமாம்!!
தமிழச்சி மட்டும் கேட்குதோ?!

No comments:

Post a Comment